துவாரகை
தலைவனின்‘அன்பு – சிவம் – அறிவுலக
அர்த்தங்கள்’ (கட்டுரைகள்)
கவ்யா பதிப்பகம்,
2011
துவாரகை தலைவனின் அன்பு –சிவம் –அறிவுலக அர்த்தங்கள்
நூல் விமர்சனம்
இலகுவான மொழி நடை. அழுத்தமான கருத்துகள். அதை நிறுவும் திண்மையான சான்றுகளோடு சிரத்தையாக எழுதிச் செல்கிறார்.
சொல்ல வந்த
கருத்துகள் முன்னுந்திச் செல்கின்றன.எடுத்துக் கொண்ட பொருளின் அனைத்து ஆழ
அகலங்களுக்கும் ஊடிப் பயணிக்கிறார்.
குட்டிக்குட்டிக்
கதைகளை எடுத்துக் காட்டுகளாகப் பயன்படுத்தியிருப்பது சொல்ல வந்த பொருளுக்கு
வலுசேர்ப்பது மட்டுமல்லாமல் வாசிப்பு சுகானுபவத்தையும் அதிகரிக்கிறது.
கட்டுரைகளில்
இவர் கொள்ளும் உலகப் பொதுமை வரலாற்று நீட்சி ஆகியவை கட்டுரை செய்பவர்கள் யாரும்
மனங்கொள்ளத்
தக்கது.அநாயாசமாக
சொல்ல வந்த பரப்பை விரித்துக் கொள்ள முடிகிறது இவரால்.
உலகத்
தலைவர்கள்,ஏடறிந்த ராஜ குடும்ப வரலாறுகள் ஆகியவற்றில் நிகழ்ந்த சம்பவங்களை தனது
கருதுகோளுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் இருந்து இவரது பன்முகப்பட்ட வாசிப்பும், நினைவாற்றலும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.எந்தக்
கட்டுரைக்கும் ஆதார நூற்பட்டியல் போட்டு நம்மை மிரட்டவில்லை.வாசிப்பு வழியே நாம்
துவாரகை தலைவனுக்கு மிக நெருக்கமானவர்கள்
ஆகிவிடுகிறோம்.
மொழி,இனம் போன்ற இன்றளவும் உணர்வு பூர்வமான அம்சங்களின் தோற்றுவாய் என்ன?அவற்றை அறிவுத் தளத்தில் இயங்குபவர்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்பன போன்றவற்றையும் வலியுறுத்தல் இன்றி நம்மையறியாமல் படியச்செய்கிறார்.
மனித
மனங்களின் நுட்பமான உணர்வுகள் சில சமயங்களில் எத்தனை பெரிய விளைவுகளுக்கு
துவக்கப்புள்ளியாக அமைந்துவிடுகின்றன என்பதை நுட்பமாக இதுவரை யாரும் பார்க்காத
கோணத்திலிருந்து பார்க்கிறார்.
நன்றி : நற்றிணை ஜூலை - செப்டம்பர் 2012


No comments:
Post a Comment