Friday, November 20, 2009

துவாரகை தலைவனின் புதிய கவிதைகள்

1 மறுவாசிப்பு

என் எழுத்து
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி.
கண்களின் செவ்வரிகளை
வாசிக்கிறேன்.
மகிழ்வோடு உற்று நோக்குகிறேன்.
என் உடலெங்கும் பாயும்
குருதியல்லவா பேசுகிறது.


2. வாழ்க்கை

உன் மீது
கல்லெறிகிறேன்.

மீண்டும் ஒரு
கல்லை வீசுகிறேன்.

நீ எரிச்சலடைகிறாய்.

தொடர்ந்து உன் மீது
கல் வீசுவேன்.

உன் காலடியில் இருக்கும்
தங்கக்காசை
நீ பார்க்கும் வரை...

3.முழுமை

அலைகளை வீசி
ஓய்வற்றிருக்கிறது
ஒரு கடல்.

எல்லாம் தன்னகத்தே வைத்து
விரிந்து பரவி
அசைவற்றுக் கிடக்கும்
மற்றொரு கடல்,
முழு வானத்தையும்
வெறித்துப் பார்த்து
படம் பிடிக்கிறது.

அனைத்தும் கொண்ட
அதனோடு

இப்போது ஒரு வானம்.

Wednesday, September 23, 2009

துவாரகை தலைவனின் பீங்கானிழையருவி கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு


கவிதைத் தொகுதியை
சென்னையில் 28-10-2007 அன்று கவிஞர் இந்திரன் [நடுவில்] வெளியிட விருட்சம் ஆசிரியர் அழகிய சிங்கர்[வலது]
பெற்றுக் கொண்டார்.
இன்னும் பல புகைப்படங்கள் பார்க்க இணையதளம் செல்லுங்கள்http://www.tamilellanthirai.yolasite.com/

Friday, August 28, 2009

எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி- துவாரகை தலைவன்

நம் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி உண்டு.வாழ்வின் அர்த்தம் நாம் வாழும் வாழ்க்கைக்குள் புதைந்து கிடக்கிறது.பறவைகளும் விலங்குகளும் இதைப்பற்றி சிந்திப்பதில்லை.கேள்விகள் இயல்பாகவே தோன்றுகின்றன.அவையே நம்மை மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்துகின்றன.கேள்விகள் நம்மை செம்மை படுத்துவதோடு நம் வாழ்க்கை பயணத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றன.கேள்விகளை புறக்கணிப்பது எதற்கும் தீர்வாகாது.கேள்விகளில் இருந்து யாரும் தன்னை விலக்கி வைத்துக் கொள்ள முடியாது.அவை நம் தாகமும் பசியும் போன்றவை.விடைகளை காண்பது முழுமையாக வாழ்வை ஏற்று அதன் இயல்போடு சற்று இயைந்து மகிழ்ச்சியை ருசிப்பதற்குத்தான்.ஒருவாறு வாழ்கைக்குள் அர்த்தம் உள்ளது என்பதை உண்ர்ந்து பயணத்தை தொடர்ந்த போதும் இறுதியாக ஒரு கேள்வி மனதில் நிற்கிறது.வாழ்க்கை ஏன் எப்போதும் கடினமாக தென்படுகிறது?இதற்கு யாரும் விதி விலக்கு இல்லை.படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஒன்று வாழ்வில் உண்மையாக காண்பது வேறு ஒன்று என்ற நிலையை மாற்றி இரண்டுக்குமான இடை வெளியைக் குறைக்க வேண்டும்.அப்போது தான் இந்தக் கேள்விக்கு விடை காணவியலும்.ஒருவர் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் அவர் எப்போதும் தன்னோடு போராடுபவராகவே இருக்கிறார்.அதனால்தான் வாழ்க்கை எப்போதும் கடினமாகத் தோன்றுகிறது.ஒருவர் தன்னை எந்த கவலையும் இல்லாதவராக காட்டிக்கொள்வதன் முலம் அவர் தன்னை ஏமாற்றிக் கொள்கிறார்.இது ஒரு வகையான கனவு உலகம்.அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட, தன் மனஆழுமையில் முன்னேற முடியாது.கடினம் என்பதை ஏற்பதுதான் விவேகம்.இப்படி அதனை ஏற்பது நம்மை தெளிவான ஆய்வுப்பாதையில் நகர வைக்கிறது.போலியான மகிழ்ச்சியில் திளைப்பது ஏதாவது ஒன்றில் அடிமைபோல் இருப்பது இவை எல்லாம் சிலர் தமக்குத்தாமே போட்டுக்கொள்ளும் திரைகள்.இவைகளை நீக்காத வரை மனதின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.கடினம் இல்லாத ஒரு மிகமிக எளிய மகிழ்சியை மட்டுமே கொண்ட வாழ்வை கதைகளில் மட்டுமே காணமுடியும்.முதலில் வாழ்வை கடினமாக உண்ர்வது தாழ்வு மனபான்மையால் ஏற்படுவது அல்ல.இது பிற்போக்கு குணமும் அல்ல.இதைத்தான் வழ்க்கையை அப்படியே ஏற்பது என்று ஞானிகள் கூறுகிறார்கள். இயல்புத் தன்மைகளை கண்டும் காணாதிருக்க கற்றுக்கொடுப்பதையே பல நூறு ஆண்டுகள் செய்து வந்ததன் காரணமாக சிந்திப்பது என்பது நெருடலாகத் தோண்றுகிறது.மனம் சிந்திக்க மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அதில் சிக்குண்டு விட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினமானதாக இருக்கும்.வாழ்க்கையின் தன்மையை கண்டுணர்ந்து அதனை ஏற்பது நாம் சிந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.இதில் அச்சப்படுவதற்கோ நெருடலாக உணர்வதற்கோ ஒன்றுமில்லை.நாம் வாழ்க்கையின் உண்மையான இயல்பான தன்மையையே கண்டுணர்கிறோம் என்ற எண்ணம் மேலெழும் போது குழப்பங்கள் விலகும்.பிறரின் மன நிலையை புரிந்துகொள்வதும் எளிதாகிறது.அதன் பிறகும் பெருவாரியானவர்களின் மனதில் கேள்வி ஒன்று எழுகிறது. வாழ்க்கை ஏன் எப்போதும் கடினமாக உள்ளது?
நாம் ஒரு பாய்மரக்கப்பலை செலுத்துவதை போல் உண்ர்கிறோம்.நம் இலக்கையும் ஒருவாறு நாம் அறிந்து வைத்திருக்கிறோம். உற்சாகம் குன்றாமல் நாம் பயணிக்கிறோம்.உடலும் உள்ளமும் சேர்ந்து பயணிக்கின்றன.நம் அனுபவ அறிவை நாம் எப்போதும் பயன்படுத்த தவறவில்லை.அறிவும் உழைப்பும் கப்பலின் இரு பாகங்களாக இருக்கின்றன.கப்பலை எத்திசையிலும் நம்மால் திருப்ப முடியும்.கப்பலை
நிறுத்தவும் முடியும். கப்பலின் பயணம் பாய்மரத்தையும் நேர்த்தியான கம்பங்களையும் சார்ந்திருக்கிறது. எது நமக்கு இடையூறாக தெரிகிறதோ அதன் இயல்பையே பயன்படுத்தி நாம் ஒன்றை சாதிக்கிறோம்.இங்கே நாம் எதையும் கட்டுப்படுத்தவில்லை மாறக அதன் போக்கை அறிந்து வெற்றி கொள்கிறோம்.பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.அலைகளும் பெருங்காற்றும் இல்லாத கடலை எங்கும் காணமுடியாது.இயற்கையின் இயல்பை அறிவது நம் பார்வையை செம்மைப்படுத்தும்.எது நமக்கு உண்மையில் வேதனை தருவது என்பது விவாததுக்கு உரியது.எல்லாவற்றையும் வேதனையாகவோ பிரச்சனையாகவோ பார்க்க முடியாது. எளிதாக தவிர்க்க வேண்டியவை நிறைய இருக்கலாம்.நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவைகளை அவை அழுத்திக் கொண்டு இருக்கலாம்.அவற்றை நீக்காத வரை ஆய்வுக்கு உட்படுத்தி விலக்க வேண்டிய பெரிய பிரச்சனைகளை நாம் நிரந்தரமாக தங்க அனுமதிக்கிறோம்.பிரச்சனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது சிதைந்து உதிர்ந்து விடுகின்றன.சில நம் ஊக்கத்திற்கு உரமாகின்றன. விஞ்ஞானத்தின் அடிப்படையை உணர்ந்தவர்கள் இதை எளிதாக அறிவார்கள்.மலை ஏற்றம் பயிலும் போது வியர்த்துக் கொட்டுகிறது.
வியர்த்தல் உடலுக்கு நன்மையா அல்லது தீமையா? பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு முதலில் அவற்றை நன்கு அறிந்து கொள்வது தலையாய ஒன்று.வாழ்வின் கடினத்தன்மையை உடைக்கும் சூத்திரம் அங்கே மறைந்து இருக்கிறது.அறிவின் தொடக்கம் மிக எளிதான ஒன்று .அது எல்லாவற்றையும் விலக்கி தெளிவாவது.அதனால் தான் உலகிற்கு வந்து சில நாட்களிலேயே மனிதன் ஒரு மொழியை பேசுவதற்கு வேகமாக கற்றுக் கொள்கிறான்.சுத்தமான தேவையற்ற பொருள்கள் இல்லாத கலம் தான் நீரை முழுவதும் நிரப்ப அனுமதிக்கிறது.மேலும் கடினமான பிரச்சனைகள் நம்மை இயங்க வைக்கின்றன.நம் உள்ளத்தை முழுமையாக திறக்கின்றன.உண்மையில் வாழ்க்கை எளிதானதும் இல்லை கடினமானதும் இல்லை.நாம் ஒரு கப்பலில் பயணிக்கிறோம்.அனுபவ அறிவைப்பெற்று சிக்கல்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்கிறோம்.வாழ்க்கை சுவாரசியம் மிக்கதாக மகிழ்ச்சிகரமானதாக மாறுகிறது.
முதிர்ச்சியின்
முன்னே அலைகள் மண்டியிடுகின்றன.மனிதன் இப்போது பெரும் வியப்பில் ஆழ்ந்து போகிறான்.ஆனால் இது முடிவல்ல .ஒரு சிறப்பான தொடக்கம்.இன்னும் மனதிற்குள் ஆழ்ந்து சென்று சிக்கலின் காரணங்களை கண்டுணர வேண்டும்.மனதை கனமாக்குபவைகளை ஒவ்வொன்றாக, மனிதனின் இனிய இயல்புநிலை தென்படுகிறது.இப்போது அலையும் இல்லை பெருங்காற்றும் இல்லை.அதுமட்டுமல்ல அங்கே கப்பலுமில்லை.எந்த உதவியும் இன்றி உங்கள் உடல் நீரில் வேகமாக நகர்வதை உணர்வீர்கள்.இப்போது முதலில் எழுந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?வாழ்க்கை எளிதானதா? கடினமானதா?

Tuesday, June 23, 2009

துவாரகை தலைவன் கவிதைகள்


சுதை

கண்கள் முயன்று
மறைந்து கொண்ட போதும்
புன்னகை இழையில்
தோன்றி மறைந்தன
புதைந்திருக்கும்
மனச்சுதை சிலைகளின் புதிராய்
மாறும் அபிநயங்கள்.

அகாதம்

வியப்பின் தலைமேல் உ யர்ந்த
போல்வால்ட் நெடுங்கம்பு முனையில்
துரும்பெனத்தெரியும்
தெளிவு .

ஒரு சிறு சலனம் தோன்ற சிலிர்த்தது
மேலே வெறித்து
அலுத்தோயும் பார்வை.

தரைஇறங்கவரும் பயணத்தில்
எதிர் நோக்கும் ஆவலின்
அசுர விரைவு .

மார்பில் பாதம் பதிய
மூர்ச்சையானது

புதிர் அவிழ்ந்த கணம் .

Saturday, April 18, 2009

இளந்திரை - காலாண்டு இதழ்

இளந்திரை
ஆசிரியர்:
துவாரகை
தலைவன்





தொ ::1: திரை:1
ஜுன் 2009

You can also read ELLANTHIRAI in the web site
http://www.tamilellanthirai.yolasite.com/

CLICK HERE இளந்திரைஇதழ் படிக்க


Add Image STEPS TO OPEN ELLANTHIRAI
1.Click[CLICK HERE] 2.Rapid share appears click free user3.click down load4.click open to read on line or click

Saturday, April 11, 2009