Friday, November 20, 2009

துவாரகை தலைவனின் புதிய கவிதைகள்

1 மறுவாசிப்பு

என் எழுத்து
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி.
கண்களின் செவ்வரிகளை
வாசிக்கிறேன்.
மகிழ்வோடு உற்று நோக்குகிறேன்.
என் உடலெங்கும் பாயும்
குருதியல்லவா பேசுகிறது.


2. வாழ்க்கை

உன் மீது
கல்லெறிகிறேன்.

மீண்டும் ஒரு
கல்லை வீசுகிறேன்.

நீ எரிச்சலடைகிறாய்.

தொடர்ந்து உன் மீது
கல் வீசுவேன்.

உன் காலடியில் இருக்கும்
தங்கக்காசை
நீ பார்க்கும் வரை...

3.முழுமை

அலைகளை வீசி
ஓய்வற்றிருக்கிறது
ஒரு கடல்.

எல்லாம் தன்னகத்தே வைத்து
விரிந்து பரவி
அசைவற்றுக் கிடக்கும்
மற்றொரு கடல்,
முழு வானத்தையும்
வெறித்துப் பார்த்து
படம் பிடிக்கிறது.

அனைத்தும் கொண்ட
அதனோடு

இப்போது ஒரு வானம்.