சுதை
கண்கள் முயன்று
மறைந்து கொண்ட போதும்
புன்னகை இழையில்
தோன்றி மறைந்தன
புதைந்திருக்கும்
மனச்சுதை சிலைகளின் புதிராய்
மாறும் அபிநயங்கள்.
அகாதம்வியப்பின் தலைமேல் உ யர்ந்த
போல்வால்ட் நெடுங்கம்பு முனையில்
துரும்பெனத்தெரியும்
தெளிவு .
ஒரு சிறு சலனம் தோன்ற சிலிர்த்தது
மேலே வெறித்து
அலுத்தோயும் பார்வை.
தரைஇறங்கவரும் பயணத்தில்
எதிர் நோக்கும் ஆவலின்
அசுர விரைவு .
மார்பில் பாதம் பதிய
மூர்ச்சையானதுபுதிர் அவிழ்ந்த கணம் .
No comments:
Post a Comment